‘கொவிட்-19′ வைரஸால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பு நீண்ட காலமாக இருக்கும்’

Date:

கொவிட்-19 வைரஸ் தொற்று நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும் என்று பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கொவிட்-19’ வைரஸால் பாதிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை பாதிப்பு வெளிப்படுகிறது என்று அவர்கள் மேலும் விளக்கியுள்ளார்கள்.

பல ஐரோப்பிய நாடுகளில் ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்ட 1.25 மில்லியன் நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வுக்குப் பிறகு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, ‘கொவிட் 19’ல் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, சுயநினைவின்மை, டிமென்ஷியா போன்றவை காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...