முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்திற்குள் நுழைவதற்கும் தற்காலிகமாக அங்கு தங்குவதற்கும் அனுமதிக்குமாறு, இலங்கை அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் டானி சாங்ராட் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தஞ்சம் கோரவில்லை எனவும் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகளின் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி, வீசா இன்றி 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார் என டேனி சோங்ரட் தெரிவித்துள்ளார்.
1/3 On 10/8/2022, Mr. Tanee Sangrat, Spokesperson of the Ministry of Foreign Affairs of Thailand, responded to a media query on the visit of Mr. Gotabaya Rajapaksa, the former President of Sri Lanka, to Thailand as follows:
— Tanee Sangrat (@SangratTanee) August 10, 2022