இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இவ்வாறான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, 6 வாரங்களில் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் என எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Company’s from UAE, Saudi Arabia, USA, China, India, Russia, UK, Malaysia, Norway & Philippines have submitted proposals for the EOIs to engage in the Petroleum Business in SL.
Committee appointed by MPOE will evaluate proposals, issue RFPs & finalize the process in 6 weeks. pic.twitter.com/Nssz2udAz4— Kanchana Wijesekera (@kanchana_wij) August 28, 2022