சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும்: மஹிந்த அமரவீர

Date:

சர்வகட்சி, தேசியம் என்ற வார்த்தைகள் இருந்தாலும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணையுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, ஆம். அரசாங்கத்துடன் இணைகின்றது என அமைச்சர் பதிலளித்தார்.

அத்தோடு எங்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் ஒரு பொருட்டல்ல. இலங்கையில் பெருமளவிலான மக்கள் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்கத்தை கலைப்பதா அல்லது தேர்தலுக்கு செல்வதா என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய போது, ​​அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்கு இல்லை அதைக் கலைக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் உள்ள 113க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

அவ்வாறானதொன்று ஒருபோதும் நடக்காது என தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் மார்ச் மாதம் வரை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், எனவே அவசர தேர்தலுக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...