ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 0718591559 / 0718085585 / 0112391358 / 1997