இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பாகிஸ்தான் அரச தலைவர், இரு நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த நம்புவதாக பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் என்றும் ஜனாதிபதி அல்வி நம்பிக்கை தெரிவித்தார்.