ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் எரான் விக்ரமரத்னவின் உரை!

Date:

பொருளாதார அரசியல் காரணங்களுக்கு அப்பால் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தின் அவசியத்தையும்  எரான் விக்ரமரத்ன வலியுறுத்தினார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் 197 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையின் வருடாந்த மாநாடு (அல் மஜ்லிஸ்) ஆகஸ்ட் 27-ஆம் திகதி கொழும்பு தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள அதன் தலைமையகக் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வமர்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் நாடு எதிர் நோக்கியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களையும் அவற்றை மட்டுப்படுத்தும் வழிவகைகளையும் விளக்கினார்.

இதேவேளை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி பிரதம அதிதிக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இம்மாநாட்டின் போது அடுத்த இரண்டாண்டுகளுக்கான இரண்டு உதவித்தலைவர்களும் மத்திய ஆலோசனை சபைக்கான (ஷூரா) 16 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...