இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பதினொரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட உயர் குற்றச்சாட்டுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கடந்த 9ஆம் திகதி (09) கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பிரதிவாதிகளையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்களது வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்தும் உத்தரவிட்டார்.