எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது, விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸடாலின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய விடுதலை நாள் அருங்காட்சியகம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.
பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும், வாத்தியக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
‘கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது, எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
மேலும், இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான் ஆளும் கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை, முதலமைச்சர் என்ற வகையில் அனைத்து தொகுதியும் எனது தொகுதிதான்.
ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக்கூடாது இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ் நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#LIVE: 76-ஆவது விடுதலை நாள் விழா#IndiaAt75 https://t.co/nuYw2fnQt6
— M.K.Stalin (@mkstalin) August 15, 2022