நாட்டிற்கு சேவைசெய்ய குடியுரிமையை துறந்தவர் கோட்டா: பிரசன்ன ரணதுங்க!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர் எனவும், அவர் போராளிகளுக்குப் பயந்து வெளிநாடுகளில் ஒழிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர்;

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை. அப்படியொரு முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபயவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...