கறை படிந்த சிவப்பு நிற நீரினால் பல்லாயிரக்கணக்கான நீர்ப் பாவனையாளர்கள் பாதிப்பு!

Date:

அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் காரியாலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நீர் வழங்கல் திட்டத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (12) மாலை முதல் நேற்று முன்தினம் (13) மாலை வரை அப்பகுதி நீர்ப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்ட கறை படிந்த சிவப்பு நிற நீரினால் பல்லாயிரக்கணக்கான நீர்ப் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை நீர் வழங்கல் திட்டங்களுக்கு வழங்கப்படும் குடி நீரே கறை படிந்த பாவிக்க முடியாத நீராக வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையினால் நீர் பாவனையாளர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு, செய்வதறியாது குடிப்பதற்கோ தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாமல் திண்டாடினார்கள்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது முற்று முழுதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீரை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கின்ற நிலையில், கடந்த இரு நாட்கள் இடம்பெற்ற இந்தச் சம்பவமானது பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல இலட்சக் கணக்கான லீற்றர் நீர் பாதைகளிலும், தமது இருப்பிடங்களிலும் திறந்து விடப்பட்டது. இது பொதுமக்களின் நீர் கணக்குகளிலேயே கழிக்கப்படவுள்ளது.

எனவே, இந்தச் செயற்பாட்டை உடனடியாக விசாரணை செய்து, நீர்ப்பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, உரிய அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...