பசும்பால் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி: மில்கோ நிறுவனம்!

Date:

போதுமான அளவு பால் உற்பத்தி செய்யப்படாததால், உள்ளூர் சந்தையில் பால் பால்மா உள்ளிட்ட பொருட்கள் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 600,000 லீற்றர் பால் தேவைப்படுவதாகவும், தற்போது 140,000 லீற்றர் பால் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாடுகள் சினைப்படுத்தப்படாமையினால், திரவ பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு மேலாக, மாடுகள் சினைப்படுத்தல் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிராமிய மட்டத்தில் திரவ பால் உற்பத்தியாளர்களின் பசுக்களை சினைப்படுத்துவதற்கான விசேட திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் எரிபொருள் நெருக்கடியால் திரவ பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...