செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு, செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இடைக்கால வரவு, செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்தார்.