நாளைய தினம் பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்த ஆண்டு வணக்க நிகழ்வுகள் மற்றும் அணிவகுப்புக்கள் இடம்பெறாது என பாராளுமன்ற சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதியின் கொடியும் ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நாளை (3) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.