பாகிஸ்தானில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை பெய்துள்ளதாலும் முந்தைய பதிவை விட இந்த ஆண்டு பருவமழை 170% அதிகமாக பெய்துள்ளது. மழையினால் கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக மலைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மற்ற அனைத்து மாகாணங்களும், பிராந்தியங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 937 பேர் உயிரிழந்தும், 1343 பேர் காயமடைந்தும், நூறாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
வீடுகள், பயிர்கள், கால்நடைகள், தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாத மழை மற்றும் வெள்ளம் தொடங்கியதில் இருந்து ஆயுதப்படை மற்றும் பிற துறைகளின் ஆதரவுடன் மத்திய மற்றும் மாகாண அரசுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அயராது மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய தேவைகள் இருப்பதனால், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் தேவைப்படுவதுடன், உயிர்களையும் மனித கண்ணியத்தையும் காப்பாற்ற எங்களுடன் கைகோர்க்குமாரும், நமது சக பாகிஸ்தானியர்களுக்கு உதவ, உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் கூடாரங்களுக்கு தேவையான நிதியை நாம் அனைவரும் சேர்ந்து திரட்டுவதட்கு இலங்கையர்களாகிய நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும்.
எந்தவொரு பாகிஸ்தானிய வங்கியிலும் (கணக்கு எண் G 12164) க்கு நிதியை மாற்றுவதன் மூலம் 2022 பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கவும், 9999 க்கு “நிதி” என்று SMS செய்வதன் மூலமும் நீங்களும் அதில் ஒரு பங்குதாரராகலாம்.
ஒரு நேரத்தில் ஒரு குடும்பத்திற்கு உதவுவோம் அத்துடன் நமது சக பாகிஸ்தானியர்களுக்கு உதவுவோம்.