புதியு கூட்டமைப்பு உருவாக்கத் திட்டம்: மைத்திரிபால சிறிசேன!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் கூட்டமைப்பு, எதிர்வரும் காலத்தில் ஆட்சி பீடத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மஹரகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தற்போது ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றமையினால், தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், தான் அதனை பொறுப்பேற்க தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க தயார் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...