சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று (4) உத்தரவிட்டார்.
அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக ஜூலை 28 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் பத்தரமுல்ல பொல்துவ மண்சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது அவரை இன்று (ஆகஸ்ட் 4) வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9-12 மணிக்குள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு நிபந்தனைகளை விதித்துள்ளது.