போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் ஏற்கப் போவதில்லை: சஜித்

Date:

பொதுப் போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் இணையப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சகல பேதங்களையும் மறந்து கருத்து வேறுபாடுகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு அரச வன்முறையை முறியடிக்க ஒன்றிணையுமாறு அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை மீறுவதாக ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் நடைபெற்ற அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச தனது பிரியாவிடை நிகழ்வில் ஆரம்பித்த பயங்கரவாத பாணி அடக்குமுறை அமுல்படுத்தப்படுவதாகவும் மக்களின் உரிமைகளை மீறுவதற்கோ அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அடக்குமுறையை தனது ஆயுதமாக பாவிக்கும் சூழ்நிலையில் நாடு மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய அரசியல் கட்சிகளின் தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...