வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வழங்கியதாகக் கூறிய 70 வயதுடைய தாயை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் ஹோமாகம கலவிலவத்தை பகுதியை சேர்ந்த பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
குறித்த தாய் நோயாளர்களைப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹோமாகம வைத்தியசாலையின் 3ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக வந்திருந்தார்.
நோயாளியை பார்க்க வந்த நோயாளியின் தாயார் கொண்டு வந்த உணவுப் பொதியை பரிசோதித்த போது, அதில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிராம் 580 மில்லி கிராம் ஹெரோயின், தீப்பெட்டிகள் மற்றும் ஈயம் தாள் கோடாரி என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு வந்த நோயாளியின் தாயார் கைது செய்யப்பட்டு, அவர் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
குறித்த நோயாளி ஒரு பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு ஓடி, மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து, அவரது கால் உடைந்து, பக்கத்து கழிவறையில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது, ஒரு சிறிய பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு. மற்றும் ஏழு கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் அவர் வசம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.