முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும், தேவையான சட்டங்களை திருத்துவதன் மூலம் போக்குவரத்து சேவைகளின் விதிமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.