மே 09 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் விசாரணைகள் நிறைவு!

Date:

மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இவர்களுள் அடங்குகின்றனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பது குறித்தும் இந்த குழு ஆராய்கின்றது.

இந்த அறிக்கை மிக விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட செயற்பட்டதுடன், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆஃப் எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதில ஆகியோர் இதன் ஏனைய அங்கத்தவர்கள் ஆவார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...