முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டு 2021 ஜனவரியில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்காலத்தில் நீதித்துறைக்கு எதிராக கருத்துக்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.