லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிறிய இலாபத்தை ஈட்டியதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனம் இதற்கு முன்னர் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நிறுவனம் எனவும் அதனை மீண்டும் இலாபகரமான நிலைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை லிட்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சுமார் 27 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதுடன், எரிவாயு விநியோகம் தொடரும் எனவும் தலைவர் தெரிவித்தார்.