வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வரித் திருத்தங்களுடன் மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா குறித்து காலி மக்களுக்கு அறிவிக்கும் முகமாக நடைபெற்ற கூட்டத்தில் வஜிர அபிவர்தன இதனைத் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டம் திருத்த வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்படுவதாகவும், வீதிகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அல்ல என்றும், உணவு, உடை இல்லாத மக்களுக்கு அரிசி, துணி வாங்குவதற்கான அமைப்பை உருவாக்குவதற்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதாகவும் வஜிர தெரிவித்தார்.
மேலும், போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளின் தலைமுறை பிறக்கிறதுஇ அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகஇ, மக்களை அபிவிருத்தி செய்பவர்கள் ஜனாதிபதியின் வரி திருத்தங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, தவிக்கும் குழந்தைகளின் பசியை போக்குவார்கள் என நம்புகிறோம்.
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எவருக்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக கனவுகள் இருக்கலாம், ஆனால் இருபது மில்லியன் மக்களின் வாழ்க்கையை வாழ்வதற்கான திட்டமும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன கூறினார்.