வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்த சீன மக்கள்!

Date:

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சீனாவில் பல்வேறு மாகாணங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. மின்சார தேவையை குறைக்க வீதிகளில் விளக்குகளை மங்கலாக ஒளிரவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தால், சோங்கிங்கில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான ஜியாலிங்கும் வறண்டுவிட்டது.

இந்நிலையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சமடையும் மக்கள் சீட்டு விளையாடியும், உறங்கியும் பொழுதை கழிக்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...