வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்: பிரதமர்!

Date:

பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
தற்போது வேலையில்லாமல் இருக்கும் 461 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் தற்போது பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த நபர்களுக்கும் நிரந்தர வேலை வழங்குவது குறித்து அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...