ஷுஹதாக்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது!!

Date:

இன்று (ஆகஸ்ட் 3, 1990), மட்டக்களப்பு, காத்தான்குடியில், இரண்டு வெவ்வேறு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முஸ்லிம் வழிபாட்டாளர்கள் போல் மாறுவேடமிட்டு, 30 குற்றவாளிகள் 300க்கும் மேற்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

பள்ளிவாசலுக்குள்ளேயே 103 பேரும் பின்னர் 21 பேருமாக 124 பேர் இதில் படுகொலை செய்யப்பட்டனர்.

03.08.1990 இரவு இவ்விரண்டு பள்ளிவாசல்களிலும் புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் துப்பாக்கிச் சூடுகளினால் 103 முஸ்லிம்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத்தாக்குதலையும் நடத்தினர்.

இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர்.

இச்சம்பவத்தில் குடும்பத் தலைவன் உயிரிழந்ததால் அக்குடும்பமே தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டது.

இளம் வயதில் விதவைகளான பல பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள் என இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோக வரலாறுகள் இருக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து பல மாதங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற சிலர் இன்றும் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர்.

இன்னும் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் வாழும் சிலரும் இருக்கின்றனர்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த இரண்டு பள்ளிவாசல்களிலும் இன்றும் இதன் அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன.

ஆண்டு தோறும் ஓகஸ்ட் 3ஆம் திகதி ஹுதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

(மூலம்: இணையம்)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...