2018 இல் எம்.பிக்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான குரல் ஒலிப்பதிவுகள்: விசாரணைகள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் கேள்வி?

Date:

2018 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான விடயங்களை பல சர்ச்சைக்குரிய குரல் ஒலிப்பதிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.

அது தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது

இதனையடுத்து, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையினை மையப்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் கடிதத்தினை சமர்ப்பித்திருந்தது.

குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டு நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது  முறைப்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் தீர்மானத்தினை குறிப்பிட்டு ஓர் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.

அதனடிப்படையில், போதிய தகவல்கள் வெளிப்படவில்லை என்ற காரணத்தினால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது குறித்த முறைப்பாடு தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...