இதுவரை நாட்டில் ஐந்து மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவித்துள்ளார்.
அமைப்புகளை செயல்படுத்த கடினமாக உழைத்த ICTA உட்பட அனைத்து மேம்பாட்டு ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.
மேலும், இந்த அமைப்புகளை செயல்படுத்த கடின உழைப்புக்கு உழைத்த இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி முறையை ஏற்றுக்கொண்டதற்காக மற்றும் பங்களித்த மற்ற அனைவருக்கும்’ என்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறைப்படி எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.