அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான கூட்டமும் இன்று கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலைய பிரதான மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் இருந்து வந்த கண்காணிப்பு குழுவின் பிரசன்னத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அதற்கமைய அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் அவர்களும் உப தலைவர்களாக அஷ்ஷெய்க் ஸாஹுல் ஹமீத் (ஜிப்ரி), அஷ்ஷெய்க் ரம்ஸி அலி (நளீமி) அவர்களும் , செயலாளராக அஷ்ஷெய்க் இர்ஹாம் (ரஹ்மானி) உப செயலாளராக அஷ்ஷெய்க் அபூபக்ர் (மக்கி) பொருளாளராக அஷ்ஷெய்க் ஸஹ்ரான் அவர்களோடு சேர்த்து ஒரு செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினுடைய நிர்வாக ஒழுங்கின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் கிளைகளுக்கான தெரிவு தற்போது நடைபெறுகின்றது.
அந்தவகையில் மேற்படி நிர்வாகத்தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.