அரசு தலையிட்டால் பேக்கரி பொருட்களை குறைக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Date:

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேவையான ஆதரவை வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  பேக்கரி உற்பத்திக்கு தேவையான முக்கிய பொருட்களான மா, சீனி, மாஜரின், முட்டை ஆகியவற்றின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பணின் விலைக்க முடியுமாக இருக்கும்  எனவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர் நாட்டில் கோதுமை மா மாபியாவும் இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், 200 ரூபாவிற்கு கோதுமை மா மாவியாவினால் 280 ரூபாவிற்கு பேக்கரி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையின் விலையும் அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்த போதிலும் சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் முட்டை கிடைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால், 190 /= அதிக விலை கொண்ட 400 கிராம் பாணின் விலையை,  50/=  குறைக்கலாம்.

எனவே அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு ஆதரவளிக்காவிட்டால்  பேக்கரி பொருட்களை வாங்க வேண்டாம் எனவும்  கூறுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...