உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 19 வெள்ளிக்கிழமை தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் கடினமான நிலைமைகள் காரணமாக மாணவர்களால் நடைமுறைப் பரீட்சைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரீட்சைகள் முடிவடைந்து உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மூன்றாவது சுற்று மதிப்பீட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான உயர்தரப்பரீட்சை தேர்வுக்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...