கனடாவின் அர்-ரப்பானிய்யா (AR-RABBANIYYA-CANADA) சார்பாக, நேற்று கனடா ஸ்காபரோ நகரில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு புனித குர்ஆன் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அஷ்ஷேய்க் அலி அஹமட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை, சந்திக்கவும், வாழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
நாங்கள் பெருமையுடன் அல்லாஹ்வையும் அவனது அன்பிற்குரிய தூத் அவர்களையும் பற்றி கூறி அவருக்கு புனித குர்ஆன் வழங்கினோம் எனவும் தனது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதை படிக்கவும், புரிந்துகொள்ளவும், எந்த உதவிக்கும் எங்களை அணுகவும் ஊக்கப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.