நாட்டில் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை!

Date:

அடுத்த 24 மணித்தியாலங்களில் பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, மாத்தறை, திஹாகொட, கம்புருபிட்டிய, முலட்டியன மற்றும் தெவிநுவர ஆகிய பகுதிகளில் தாழ்நிலப் பிரதேசங்களில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், களுகங்கையின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 மணித்தியாலங்கள் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பகுதியினூடாக பயணிக்கும் வாகனங்களும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

இதேவேளை, கடும் மழை காரணமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மண்சரிவு அபாயப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...