நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்கொழும்பு மக்கள் நிதியுதவி!

Date:

அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பாதிப்பினால் நாவலப்பிட்டிய பிரதேசம் மிக மோசமாக பாதிப்படைந்தது யாவரும் அறிந்த விடயமே.

இந்தப் பாதிப்பின் காரணமாக அப்பகுதி வாழ் மக்கள் உடமைகளை இழந்து, உயிர்ச் சேதங்களுக்கு ஆளாகி, தம்முடைய வாழ்விடங்களை இழந்து வாழ்வாதாரங்களுக்கு கஷ்டப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கான பல்வேறு மனிதாபிமான உதவிகளை அப்பகுதி வாழ் மக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த அமைப்புக்களும், பள்ளிவாயல்களும், முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத சமூகங்களும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உதவிகளின் வரிசையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த தனவந்தர்களும், பிரஉபகாரிகளும் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவாக 949,204.00  ரூபாய் தொகையை அவர்கள் சேகரித்து நேற்று நாவலப்பிட்டிய பகுதிக்குச் சென்று அவர்கள் நேரில் கையளித்து இருக்கின்றார்கள்.

இத்தகைய இந்த மனிதாபிமான, சகோதரத்துவ உதவிகளை மேற்கொண்ட இந்த சகோதரர்களுக்கும், நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்த தனவந்தர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நாம் அனைவரும் நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...