பாகிஸ்தானில் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது: தேசிய அவசர நிலைமை பிறப்பிப்பு!

Date:

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது.

 பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 6.80 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 இலட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 900க்கும் அதிகமானோர் பலியானதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்திருந்தது.

நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 45 பேர் பலியாகினர்.

இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இராணுவத்தை களமிறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...