பணம் செலுத்தி வழக்கம் போல் பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகளை செய்து தருவதற்கு பதிலாக ப்ரீப்பெய்டு கார்ட் மூலம் பணம் செலுத்தி பயணிகளுக்கு பயண வசதிகளை வழங்குதற்கு தேசிய போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கொட்டாவவில் உள்ள மகும்புர பல்வகை மையத்திலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக காலி வரை பயணிக்கும் பஸ்களில் முன்னோடி திட்டம் இன்று மேற்கொள்ளப்படும்” என தேசிய போக்குவரத்து ஆணையம் இன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இது இடம்பெற்றது.
சாதாரண டெபிட் கார்டு போன்று செயல்படும் இந்த கார்டு, முன்பணம் செலுத்தும் முறையில் பயணிகளுக்கு தேவையான பணத்தை டெபாசிட் செய்து அதன் மூலம் பயணம் தொடர்பான பணத்தை செலுத்த அனுமதிக்கிறது.
மிகவும் பாதுகாப்பான பணம் செலுத்தும் முறையாக, இந்த அட்டையானது தற்போது உள்ளுர் அரச வங்கியான மக்கள் வங்கியின் ஊடாக கிடைக்கப்பெறுவதுடன், தற்போதுள்ள அட்டைகளுக்கும் இந்த பணம் செலுத்தும் வசதி உள்ளது.
மேலும், இன்று தொடங்கப்பட்ட முன்னோடி திட்டத்தில் கண்டறியப்பட்ட பிழைகள் மற்றும் சிக்கல்கள் சரி செய்யப்பட்டு தேவையான மேம்பாடுகள் செய்யப்படும்
எதிர்காலத்தில் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கும் ரயிலில் பயணம் செய்வதற்கும் இந்த முன்பணம் செலுத்தும் அட்டை முறையை பயன்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.