மாணவர்களின் 80 வீத வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

Date:

டிசம்பரில் 2022 உயர்தர (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஜூலை 2020 இல் உயர்தர வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாடசாலை  அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு முதல் வட்டியில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், கல்வி அமைச்சகம் 2019/2020உயர்தர முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கான கடைசி திகதி  8 நாட்கள் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...