வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை: காஞ்சன விஜேசேகர!

Date:

எந்தவித அனுமதியும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இன்றைய நிலவரப்படி 1,250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், இன்று சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக தகவல்கள்  தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு, குருநாகல், ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...