‘வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையை வழங்க வேண்டும்’ :டில்வின் சில்வா

Date:

ரணிலின் அரசாங்கம் நரகத்தின் இடைவெளியில் உள்ளது, அந்த நரக இடைவெளியை விரைவில் முடித்து விடுவோம் என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய வெளியேறி ரணில் வந்த பின்னர் போராட்டத்தில் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பொலிஸார் தடியடி நடத்த ஆரம்பித்துள்ளனர்.

அடக்குமுறை ஏவத் தொடங்கிவிட்டது. நீங்கள் நரகத்தின் இடைவெளியில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இந்த இடைவெளி நீண்ட காலம் நீடிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தைப் பார்த்து கதை கதையாக கூறுகின்றார். அதனால் பதில் இல்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க வழி இல்லை. அதற்கு எந்த திட்டமும் இல்லை.

இந்த திருடர் கூட்டத்துடன், இந்த குற்றவாளிகளுடன், இந்த பிரச்சனைகளுடன், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்? நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், இந்தக் கேள்விகளுடன் இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியுமா? எனவே ரணிலிடம் நேரடியாக சொல்ல தயாராகி வருகிறோம்.

இதேவேளை, பாராளுமன்றத்தை கலைத்து வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...