அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) அவர் தனது பதவியை பொறுப்பேற்றார்.
ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த தினித் சிந்தக கருணாரத்ன, செய்தி இணை ஆசிரியர் பதவி உட்பட பல பொறுப்பான பதவிகளை வகித்து ஊடகத்துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவமுள்ள ஊடகவியலாளர் ஆவார்.
கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் உயிரியல் பட்டதாரி ஆவார்.
அதேநேரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகா கல்லூரியில் தகவல் தொடர்பும் படித்துள்ளார். தினித் சிந்தக கருணாரத்ன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகத்துறையில் பரந்த அனுபவம் கொண்டவர்.
புதிய தகவல் பணிப்பாளர் நாயகம் தனது பதவியில் கடமைகளை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் ஊடக அமைச்சின் மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல நிபுணர்கள் ஊடகத்துறையினர் கலந்து கொண்டனர்.