ஆகஸ்ட் பிறந்த குழந்தைகளுக்கான டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள்!

Date:

தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் தற்போது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்  வழங்கி வருகிறது.

ஆகஸ்ட் 1, 2022 க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என்று திணைக்கள பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழுக்கான திட்டம் இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

குழந்தை 15 வயதை அடையும் போது, டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதிவாளர் நாயகத்தின் பிரகாரம், ஆங்கிலம்-தமிழ் அல்லது சிங்களம்-தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...