இந்த வார இறுதிக்குள் 22ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து!

Date:

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இந்த வார இறுதிக்குள் பெற்றுக் கொள்ள நம்புவதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்ற பிறகு, நாட்டுக்கு ஏற்ற வகையில் வரைவு மசோதா நிறைவேற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் ஊழல் நடைபெறுவதாக தெரிவித்த அமைச்சர், ஊழல் மோசடிகளை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக கடந்த காலங்களில் பதினைந்து சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்   “பண முகாமைத்துவத்தில் எமது நாடு தவறிழைத்துவிட்டது” என்றும்  தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்கும் நிறைவேற்று அதிகாரமும் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது என்றும், ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனையும் அதற்கு பெரும் உத்வேகத்தை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...