இலங்கை- ஜப்பான் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Date:

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக கடனாளிகளுடன் முன்னணி பாத்திரத்தை வகிக்க தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

இன்று  டோக்கியோவில் ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அங்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் பல முதலீடுகளை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்ததன் மூலம் ஜப்பான்-இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டமை தொடர்பில் வருந்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு ரத்து செய்யப்பட்ட   அத்தியாவசியமான திட்டங்களை மீள ஆரம்பிக்க தமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஜப்பானிய முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக நாட்டம் காட்டும் எதிர்கால திட்ட வாய்ப்புகளை பரிசீலிக்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டளவில் இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் ஜப்பானின் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைப் பாராட்டியுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், உலக அரங்கில் ஆசியாவின் பிரதிநிதித்துவம் விஸ்தரிக்கப்பட வேண்டுமென மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...