ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு இன்று (செப்டம்பர் 12) ஆரம்பமாகி, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உள்ளூர் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கைக்கு கூடுதலாக 46/1 தீர்மானத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்படும்.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் இந்த அமர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.