கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதான அரச நிறுவனங்களின் 18 கட்டிடங்கள் உட்பட பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின்படி, பாராளுமன்ற வளாகம், உச்ச நீதிமன்ற வளாகம், கொழும்பு உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு , இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம் , பிரதம மந்திரியின் செயலாளர் அலுவலகம்,  பாதுகாப்புச் செயலாளரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் இராணுவத் தளபதிகளின் குடியிருப்புகள் மற்றும் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கொழும்பு நகரின் பெரும் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...