‘பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டம் 2022’ பிரகடனம்!

Date:

‘பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டம் 2022′ இன்று இஸ்லாமாபாத் மற்றும் ஜெனிவாவில் பாகிஸ்தான் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த பேரழிவு தந்து வரும் பாரிய மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற முன்பு எப்போதும் காணப்படாத அளவிலான பேரழிவுகளின் பின்னணியிலேயே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வியற்கை பேரிடர் காரணமாக 350 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,100 பேர் இது வரை உயிரிழந்துள்ளதுடன் 1,600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தவிர சுமார் 287,000 வீடுகள் முழுமையாகவும் 662,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

735,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் 2 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

மேற்படி 2022 பாகிஸ்தான் வெள்ள மீட்புத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான ஆதரவு, இடம்பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக தங்குமிட வசதி மற்றும் உணவு அல்லாத பொருட்கள், ஊட்டச்சத்து திட்டங்கள், ஆரம்ப சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட 5.2 மில்லியன் மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துகிறது. செயல்பாடுகளில் சுகாதாரம், பெண்கள் சுகாதாரம் மற்றும் கல்வி ஆதரவு ஆகியவை அடங்கும்.

பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டமானது முக்கிய மனிதாபிமானத் தேவைகளையும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நேச நாடுகளுடன் இணைந்து ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகின்றது.

இதன் மூலம் அவசரநிலைக்கு பதிலளிப்பதற்கு நன்கு ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டம் எனப்படுவது உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் உணவு அல்லாத பொருட்கள், நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல துறை அணுகுமுறையுடன் தொகுக்கப்பட்ட ஒரு விரிவான திட்டமாகும்.

இந்தப் பேரழிவின் சுமை பாகிஸ்தானின் மீது விழுந்து கொண்டிருக்கும் வேளையில், கடந்த பல தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த சுமார் மூன்று மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்களில் குறைந்தது 421,000 பேர் ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆவர்.

இதே வேளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவில் பட்டோ சர்தாரி கூறியதாவது:

பாகிஸ்தானியர்களாகிய எங்களிடம் இயல்பிலேயே உள்ள பரோபகார மனப்பான்மையால், பொது மக்கள், சிவில் சமூகம் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பெரிய அளவில் ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

2022 இல் நிறுவப்பட்ட பிரதமரின் வெள்ள நிவாரண நிதி மற்றும் வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களின் பங்களயிப்புக்களும் நிவாரணப் பணிகளில் பெருமளவில் பிரயோசனம் அளித்து வருகின்றன.

இருப்பினும், இந்த உதவிகள் மொத்தத் தேவைகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்து வருகின்றன.

எவ்வாறாயினும், துயரத்தில் இருக்கும் பாகிஸ்தானிய மக்களுக்கு சர்வதேச சமூகத்திலிருந்து கிடைத்து வரும் ஆதரவு மற்றும் உதவிக்கு நான் நன்றி கூறிக்கொள்கின்றேன்.

இது அவர்களின் துன்பத்தைப் போக்க உதவுகிறது மற்றும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பாரிய அயவில் துணை புறிகின்றது’

இதனிடையே, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும், பாகிஸ்தான் அரசின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை ஆகும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகள் வெள்ளத்தை விட வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு உலக சமூகம் தங்களின் தாராளமான பங்களிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தானின் திட்டமிடல் அமைச்சர் அஹ்சான் இக்பால், உலகளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் பங்களிப்பு போதாமை இவ்வாறான இயற்கை அனர்த்தங்களுக்கு வழிவகுத்துள்ளது என்றும் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பத்து நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த ஆண்டின் முதல் பாதியில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காட்டுத் தீ மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் இது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

‘பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் இது போன்ற அழிவுகளுக்கு பாகிஸ்தான் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, பாகிஸ்தானுக்கு உதவி வழங்க வேண்டிய தார்மீகப் பொருப்பு அனைவருக்கும் உள்ளது.

பாகிஸ்தானின் மற்ற அதன் மக்களும் அரசாங்க அதிகாரிகளும் அனைத்தையும் இழந்து நிற்கதியாகியுள்ளவர்களுக்கு தங்களிடம் உள்ளவற்றில் பெரும் பகுதியை நன்கொடையாக அளித்து எப்படி உதவுகிறார்கள் என்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

இந்நிலையில், சர்வதேச சமூகம் உடனடியாக முன் வந்து, பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக உதி வழங்க வேண்டும்’ என, பாகிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விதிவட மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜூலியன் ஹர்னிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதே நேரத்தில், பாகிஸ்தானின் தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அக்தர் நவாஸ், தற்போதைய நிலைமை மற்றும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து துல்லியமான மற்றும் விரிவான மதிப்பீட்மு அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கினார். இதில் பாகிஸ்தானின் நேச நாடுகள் வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளும் உட்படும்.

இதனிடையே, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைவர் ஷேவியர் காஸ்டிலானோஸ் மொஸ்கியுரா கருத்துக் கூறுகையில், ‘பாகிஸ்தான் இதுவரை கண்டிராத கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உதவ எங்கள் அமைப்பு உறுதிபூண்டுள்ளது.

பாகிஸ்தானின் ரெட் கிரசென்ட் அமைப்பு, பாகிஸ்தான் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து, சுகாதாரப் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம், அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் சுமார் 32 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல அடிப்படை நிவாரண சேவைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

இதில், இவ்வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் விசேட உதவிகளை வழங்கவும், பொதுவாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கு அடிப்படை உதவிகள் செய்யவும் நாம் திட்டமிட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கருத்து வெளியிடுகையில், ‘இன்று எனது அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகம் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு உலகளாவிய உதவி தேவைப்படும் மிகவும் சோகமான தருணம் இது’ எனக் கூறினார்.

‘2022 பாக்கிஸ்தான் வெள்ளப் பதிலளிப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டதில் இஸ்லாமாபாத் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஏராளமான இராஜதந்திர ஆளணிகள், பாகிஸ்தானின் ஐ.நா. ஏஜென்சிகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள், ஐ.நா. பிரதிநிதிகள், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட விலைமதிப்பற்ற உயிர் இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் குறித்து அவர்கள் வருத்தமும் தெரிவித்ததோடு, பாகிஸ்தான் அரசின் நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

பாக்கிஸ்தான் எனப்படுவது மனிதாபிமான அவசரநிலைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் திறனும் அது தொடர்பான ஆழ்ந்த அனுபவமும் உள்ளதொரு நாடாகும். மேலும் ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பெரும் முன்னேற்றதும் கண்டுள்ள ஒரு தேசமாகும்.

இருப்பினும், தற்போதைய வெள்ளத்தின் அளவு மற்றும் அளவு முன்னெப்போதும் இல்லாத அதன் பிரம்மாணடம் வெளிப்புற உதவிகள் பாகிஸ்தானுக்கு தேவைப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த பேரழிவிற்குக் காரணமான பாரிய மழைப்பொழிவு 30 ஆண்டு தேசிய மழை சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். இது உலகின் பல நாடுகளால் தாங்க முடியாத ஒரு மோசமான நிலையாகும்.

எனவே, உலகின் ஏனைய நாடுகள் இக்கடினமான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு நிவாரணம் வழங்குவதும், வெள்ளத்தின் நேரடி மற்றும் ஒன்றோடொன்று இணைந்த விளைவுகளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...