ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களின் பைகள் பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து பிடிபடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஐஸ் போதைப் பொருட்களை கொண்டு செல்வது மிகவும் இலகுவானது எனவும், அவற்றை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை எனவும் எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.