போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டமைக்கு எதிராக பிரித்தானிய பிரஜையான கெல்லி பிரஸ்ஸர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவை நீதிமன்றத்தில் செலுத்துமாறு இன்று (14) உத்தரவிட்டார்.
அட்டரனி ஜெனரல் முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு, இந்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான நீதிமன்ற கட்டணத்தை நீதிமன்றத்திற்கு செலுத்த உத்தரவிட்டது.
குறித்த மனு எஸ். துரைராஜா, புவனேகா அலுவிஹாரே மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (14) இந்த அடிப்படை உரிமைகள் கோரப்பட்டது.
லக்ஷான் டயஸ் தாக்கல் செய்த இந்த மனுவில், குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் உண்மைகளை மறைத்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.