முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் பெரும்பாலானவை, டுவிட்டர் பதிவுகள்!

Date:

சமூக ஊடகங்களில் கிட்டத்தட்ட 86 சதவீத முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து வந்தவை என்று ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய கவுன்சில் ஆஃப் விக்டோரியா (ICV) அறிக்கை கண்டறிந்துள்ளது.

அதேநேரம், மேலும் வெறுக்கத்தக்க பேச்சு வளர்வதற்கு ஒரு புதிய இடத்தை இணையம் வழங்குவதாகவும், அதைத் தடுக்கத் சமூக ஊடக தளங்கள் தவறியதாகவும் ஜநா சுட்டிக்காட்டியுள்ளது.

ட்விட்டரில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களும் பதிவுகளும் பெரும்பகுதி மூன்று நாடுகளில் இருந்து பகிரப்படுகின்றது அதில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருந்து வருகின்றன, அங்கு ஆளும் பாஜக முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இயல்பாக்குவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் 86 சதவீத முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை தடுக்கத் தவறியுள்ளது. அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் 94 சதவீதத்தில் செயல்படத் தவறிவிட்டது.

மேலும், மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் 2017-2019 க்கு இடையில் 86 சதவீத தீங்கிழைக்கும் பதிவுகளை உருவாக்கியுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் மற்றும் மசூதிகள் மீதான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு வழிவகுத்தது.

கடந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு ‘தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க’ சர்வதேச சமூகத்தை வலுவாக ஊக்குவித்தது.

வன்முறையைத் தூண்டும் மத வெறுப்பின் எந்தவொரு ஆதரவையும் தடைசெய்யவும் அதே நேரத்தில் முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்பு விகிதத்தை எட்டியுள்ளது என்று எச்சரித்தது.

இந்த செயலற்ற தன்மை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் மீது பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக ஊடக நிறுவனங்கள் இப்போது குறிப்பாக மூன்று நாடுகளுக்குள் பயனர் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும், ஒரு புதிய ஆய்வின்படி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை ட்விட்டரில் 86 சதவீத முஸ்லிம்-விரோத உள்ளடக்கத்தை பங்களித்துள்ளன.

இதேவேளை, இந்தியாவை தளமாகக் கொண்ட ட்விட்டர் பயனர்கள் மத்தியில், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை, ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ட்விட்டர் தனது தளத்தில் இருந்து முஸ்லிம் விரோத வெறுப்பை அகற்றுவதற்கான அழைப்புகளைத் தொடர்ந்து மறுத்தால், முஸ்லிம் சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவார்கள், பாதிக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்.

கடந்த ஆண்டுகளில் நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மசூதிகளில் காணப்படும் அதே வகையான தாக்குதல்களுக்கு மேற்கு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்.

ஆன்லைன் வெறுப்பு மற்றும் ஆஃப்லைன் வெறுப்பு குற்றங்களுக்கு இடையே உள்ள தொடர்பு நிறுவப்பட்டுள்ளது. ட்விட்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் துஷ்பிரயோகம் அதிகமாக உள்ளது, முஸ்லிம்களுக்கு எதிரான   பதிவுகளை அகற்றுவதில் டுவிட்டர் ‘கடுமையான தோல்வியடைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...